மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலி சகோதர, சகோதரிகள் கண் எதிரே பரிதாபம்
" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

ஆவடியை அடுத்த திருநின்றவூர் வெங்கடே‌‌ஷ்வரா நகரைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் ஹேமநாதன் (வயது 20). இவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

 

ஹேமநாதன் நேற்று முன்தினம் தனது அண்ணன் மோகன், அக்காள் கலைவாணி மற்றும் தங்கை ஜீவிதாவுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு கடலில் இறங்கி அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.


 


 

ராட்சத அலையில் சிக்கி பலி

 

அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் ஹேமநாதன் சிக்கிக்கொண்டார். இதைக்கண்ட அவரது சகோதரன் மற்றும் சகோதரிகள் கூச்சலிட்டனர்.

 

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள், ராட்சத அலையில் சிக்கித்தவித்த ஹேமநாதனை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

தனது சகோதரன் மற்றும் சகோதரிகளின் கண்எதிரேயே ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Popular posts
சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image